வியாழன், 14 மார்ச், 2013

16 விநாயகா போற்றி ஆக்கம் R.P.OM

16 விநாயகா  போற்றி
ஆக்கம்  R.P.OM



விநாயகனின் 16 திரு நாமங்கள்

ஓம்  ஏகதந்த  விநாயக போற்றி 
ஓம் ஹேரம்ப விநாயக போற்றி
ஓம் கபில  விநாயகா  போற்றி
ஓம் கஜகர்ண  விநாயகா  போற்றி
ஓம் கஜானன  விநாயகா  போற்றி 
ஓம் கணாத்யக்ஷ விநாயகா  போற்றி 
ஓம் சுமுக  விநாயகா  போற்றி 
ஓம் சூர்ப்பகர்ண  விநாயகா  போற்றி 
ஓம் ஸ்கந்த பூர்வஜ  விநாயகா  போற்றி 
ஓம் தூமகேது விநாயகா  போற்றி 
ஓம் லம்போதர  விநாயகா  போற்றி 
ஓம் வகரதுண்ட  விநாயகா  போற்றி 
ஓம் விகனராஜ  விநாயகா  போற்றி 
ஓம் விகட  விநாயகா  போற்றி 
ஓம் ஸ்ரீ சித்தி புத்தி  விநாயகா  போற்றி

16 பேறுகள் :
 அறிவு
அழகு
ஆயுள்
ஆரோக்கியம்
இளமை
கல்வி
சத்புத்திர பாக்யம்
சொர்ணம்
தைர்யம்
தான்யம்
நல்விதி
நுகர்ச்சி
புகழ்
பெருமை
வெற்றி

உபசாரம்  16
16 வகை உபச்சாரம்
தவிசளிக்கிறோம்
கை கழு நீர் தருகிறோம்
கால் கழு நீர் தருகிறோம்
முக்குடி நீர் தருகிறோம்
நீராட்டுகிறோம்
ஆடை சாத்துகிறோம்
முப்புரி நூறரல் செய்கிறோம்
தேய்வை பூசுகிறோம்
மலர் சாத்துகிறோம்
மஞ்சளரிசி தூவுகிறோம்
நறும்ம்புகை காட்டுகிறோம்
விளக்கிடுகிறோம்
கருப்பூரமேற்றுகிறோம்
அமுதம் ஏந்துகிறோம்
ஆடை காய் தருகிறோம்
மந்திர மலரால் அர்சிக்கிறோம் எங்கள் அன்பு கணபதி ராஜாவே .
16 திருநாமங்கள் 

6 விநாயகா six vinayaga கணபதியின் 6 படை வீடுகள் ஆக்கம் ஆர்.பி .ஓம் 8056156496

6 விநாயகா
ஆக்கம் ஆர்.பி .ஓம்  8056156496
*********************************************************************************
கணபதியின் 6 படை வீடுகள்
******************************
ஓம் திருவண்ணாமலை விநாயகா 

ஓம்  கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வர விநாயகா 
ஓம்  நாகப்பட்டினம் திருக்கடையூ அமிர்தகடேஸ்வர விநாயகா 
ஓம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர விநாயகா 
ஓம் காசி துண்டிவிநாயக விநாயகா 

ஓம் கடலூர் திருநாரையூ சித்தநாதேஸ்வரர் விநாயகா 
********************************************************************************************
முருகனின்  6 படை வீடுகள்
*****************************
ஓம் திருவண்ணாமலை விநாயகா 

ஓம் திருபரங்குன்ற விநாயகா 
ஓம் திருச்செந்தூர் விநாயகா
ஓம் பழனி  விநாயகா 
ஓம் சுவாமிமலை விநாயகா 
ஓம் திருத்தணிகை விநாயகா 
ஓம் பழமுதிர்ச்சோலை விநாயகா 
*****************************************************************************
பிள்ளையார்.. பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்..
******************************************************************************************
கணபதியை கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பார்கள். விநாயகரின் நாபி பிரம்மனின் அம்சமாகவும், முகம் விஷ்ணுவின் அம்சமாகவும், இடது பாகம் சக்தியின் அம்சமாகவும், வலது பாகம் சூரிய அம்சமாகவும், முக்கண் சிவனின் அம்சமாகவும் விளங்குகிறது. இதனால் விநாயகர் ஒருவரை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது.
விநாயகர் - தனக்கு மேல் யாரும் இல்லாத வெற்றி நாயகர்
பிள்ளையார் - சிவசக்தியின் மூத்த பிள்ளை
கணேஷ், கணபதி - சிவனின் பூத கணங்களுக்கு தலைவர்
விக்னேஸ்வரர் - தடைகளைத் தகர்ப்பவர்
கஜமுகன், கஜராஜன் - யானை முகம் கொண்டவர்.
முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் இருப்பதைப்போலவே, விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. இவை விநாயகர் தலங்களில் பிரதானமானவையாக கருதப்படுகிறது.
முதல் படைவீடு - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு - கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு -
நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
 திருக்கோயில்
நான்காம் படைவீடு - 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு - 
காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு - 
கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
யார் பட்டம் ஏன் வந்தது?
தாயை தாயார், தந்தையை தந்தையார் மாமியை மாமியார், என்று யார் அடைமொழி போடுவது ஒரு மரியாதைக்காக. நம் வீட்டு பிள்ளைகளை பிள்ளையாரே வருக என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், சிவ பார்வதியின் மூத்த பிள்ளை தெய்வக்குழந்தை இல்லையா? எனவே, தெய்வத்துக்குரிய மரியாதையுடன் பிள்ளையார் என்கிறோம். இந்த தெய்வத்தின் அருள்பெற்ற ஒரு பெண்மணியும் யார் பட்டம் பெற்றார். தமிழ் மூதாட்டி அவ்வையை பிள்ளையார், தன் தும்பிக்கையால் தூக்கி கைலாயம் கொண்டு போய் சேர்த்தார். எனவே, இந்தத் தெய்வப்புலவரையும் அவ்வையார் என்கிறோம்.
************************************************************************
விநாயகரை கடலில் கரைப்பது ஏன்?
********************************
ஒருசமயம் பார்வதி தேவி, கங்கையில் நீராடிய போது தன் உடலிலிருந்த அழுக்கை திரட்டி பொம்மையாக்க, அது யானை முகமும், மனித உடலும் கொண்டிருந்தது. அதை அவள் கங்கையில் எறிந்தாள். அந்த பொம்மை விநாயகராக வெளிப்பட்டது. இவரை பார்வதியும் கங்கையும் பிள்ளையாக ஏந்தி கொண்டனர். இதனால், விநாயகருக்கு பார்வதியும், கங்கையும் அன்னையர் ஆனார்கள். இந்த காரணத்தினால் தான் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கங்கையில் கரைக்கும் பழக்கம் முதலில் ஏற்பட்டது. பின்னர் கங்கையும் சேரும் இடம் கடல் என்பதால் விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விக்ன ராஜர்
விநாயகருக்கு விக்ன ராஜர் என்ற பெயர் உண்டு. வரேணியன் என்ற மன்னனின் மனைவி புட்பகை கருவுற்றிருந்தாள். விநாயகர் கருவிலிருந்த குழந்தையை மறைத்து அதற்கு பதில் யானை முகத்துடன் தானே குழந்தையாக அவதரித்தார். இதனைக் கண்ட ராஜா குழந்தையை காட்டில் விடும் படி உத்தரவிட்டார். காவலர்கள் குழந்தையை காட்டில் பராசரமுனிவர் ஆஸ்ரமத்தின் அருகே விட்டனர். முனிவர் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். அப்போது கிரவுஞ்சன் என்ற அசுரன் பெருச்சாளி உருவெடுத்து அங்கிருந்த முனிவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு விக்னன் என்ற பெயரும் உண்டு. விநாயகர் அவனை அடக்கி தன் வாகனமாக்கி கொண்டார். அன்றிலிருந்து விநாயகர் விக்னராஜா ஆனார்.
*********************************************************************************
பிள்ளையாரின் ஆயுதங்கள்
************************
பொதுவாக பிள்ளையார் ஐந்து கைகளில் மேல் இரண்டு கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார். இவை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். இவரது ஆயுதங்கள் மொத்தம் 29. பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாக பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்புவில், சங்கம், புஷ்ப பாணம், கோடரி, அட்சர மாலை, சாமரம், கட்டு வாங்கம், சக்கரம், அகல் விளக்கு, வீணை ஆகியவை.
********************************************************************************
விநாயகரின் 16 திருநாமங்கள்
**************************
பாலகணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்னராஜா கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, புவனேச கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி.
*****************************************************************************
வீணை விநாயகர்
****************
விநாயகரை கையில் மோதகம், கொழுக்கட்டை வைத்தபடி பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரை சரஸ்வதிக்குரிய வீணையை கைகளில் வைத்தபடி ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு அம்பாள் வேதநாயகி சன்னதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் இவர் சிற்ப வடிவமாக இருக்கிறார். புலிக்கால்களுடன் இருக்கும் இவருக்கென தனி வழிபாடு கிடையாது. அம்பாள் வேதநாயகியின் இடது காலடியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இசைப் பயிற்சி பெறுபவர்கள் அம்பாள் சன்னதி முன்பு நின்று இவ்விரு விநாயகர்களையும் தரிசித்தால், இசைக்கலையில் சிறப்பான தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை.
*********************************************************************************
அருகம்புல் அணிய ஏற்ற நட்சத்திரங்கள்
***********************************
விநாயகருக்கு எல்லா நாளிலும் அருகம் புல் அணிவித்து வழிபடலாம் என்றாலும், கிழமைகளில் திங்கள் கிழமையும், நட்சத்திரங்களில் உத்திராடமும் மிகவும் உயர்ந்தது. விநாயகர் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை ஆவார். இதுதவிர, அசுவதி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, ஆகிய 16 நட்சத்திர நாட்களில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
*****************************************************************************
அபிஷேக நட்சத்திரங்கள்
***********************
விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?
பாலபிஷேகம் - உத்திராடம்
சந்தன அபிஷேகம் - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம் - ரேவதி
திருநீறு அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு - திருவாதிரை
அன்னாபிஷேகம் - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம் - திருவோணம்
*********************************************************************************
விநாயகரின் ஐந்து கைகள்
***********************
விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.
அங்குசம் தாங்கிய வலது மேல் கை - சி
பாசம் பற்றிய இடது மேல் கை - வா
தந்தம் ஏந்திய வலது கை - ய
மோதகமுள்ள இடது கை - ந
துதிக்கை - ம
*********************************************************************************
வெல்லப் பிள்ளையார்
********************
விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.
*********************************************************************************
விநாயகர் விளக்கு
****************
விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.
********************************************************************************
கல்யாண வரம் தரும் கட்டை பிரம்மச்சாரி
*************************************
தனக்கொருத்தி இல்லாமல் தனித்திருக்கும் சுவாமியை சுற்றிச்சுற்றி வந்து, எனக்கொருத்தி வேண்டுமென கேட்கிறார்கள் பிரம்மச்சாரிகள். கல்யாணம் செய்து கொள்ளாத இந்த கட்டைப் பிரம்மச்சாரியிடம் இதை கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது தெரியுமா? வள்ளியை மணம் முடிக்க முருகப்பெருமாள் பகீர தப்பிரயத்தனம் செய்து பார்த்தார். கதை நடக்கவில்லை. கடைசியில் அவர் கூப்பிட்டது தன் அண்ணனைத் தான்! அவர் யானை வடிவில் வந்தார். வள்ளியை விரட்டினார். அவள் பயந்து போய், வேடன் வடிவில் வந்த முருகனைத் தழுவி நின்று கொண்டாள். காதல் மலர்ந்தது. கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காத ஒன்றை யாருக்கும் கிடைக்க விடக்கூடாது என்ற எண்ணமுள்ளவர்கள் தான் உலகத்தில் அதிகம். ஆனால், விநாயகரோ, தனக்கு இல்லாததை கூட பிறருக்கு தரும் அருள் வள்ளல். அதனால் தான் பிரம்மச்சாரிகள் அவரைத் தேடிப் போகிறார்கள்.
*********************************************************************************************



புதன், 13 மார்ச், 2013

64 விநாயகா sisty four ஆயகலைகள் அறுபத்து நான்கு

64 விநாயகா 
ஆயகலைகள் அறுபத்து நான்கு 

1. அக்கரவிலக்கணம் 

2. இலிகிதம் 

3. கணிதம் 

4. வேதம் 

5. புராணம் 

6. வியாகரணம் 

7. நீதி சாஸ்திரம் 

8. ஜோதிடம் 

9. தர்ம சாஸ்திரம் 

10. யோக சாஸ்திரம் 

11. மந்திர சாஸ்திரம் 

12. சகுன சாஸ்திரம் 

13. சிற்ப சாஸ்திரம் 

14. வைத்திய சாஸ்திரம் 

15. உருவ சாஸ்திரம் 

16. இதிகாசம் 

17. காவியம் 

18. அலங்காரம் 

19. மதுர பாடனம் 

20. நாடகம் 

21. நிருத்தம் 

22. சத்தப்பிரும்மம் 

23. வீணை 

24. வேணு (புல்லாங்குழல்) 

25. மிருதங்கம் (மத்தளம்) 

26. தாளம் 

27. அத்திரப் பரிட்சை 

28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்) 

29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்) 

30. கஜப் பரிட்சை (யானை எற்றம்) 

31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்) 

32. இரத்தினப் பரிட்சை 

33. பூமிப் பரிட்சை 

34. சங்கிராம விலக்கணம் 

35. மல்யுத்தம் 

36. ஆகருடனம் 

37. உச்சாடனம் 

38. வித்து வேடனம் (ஏவல்) 

39. மதன சாஸ்திரம் 

40. மோகனம் 

41. வசீகரணம் 

42. இரசவாதம் 

43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) 

44. பைபீலவாதம் (மிருக பாஷை) 

45. கவுத்துவ வாதம் 

46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்) 

47. காருடம் 

48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்) 

49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) 

50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) 

51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) 

52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது) 

53. அதிரிசியம் 

54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) 

55. மகேந்திர ஜாலம் 

56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) 

57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்) 

58. வாயுஸ்தம்பம் 

59. திட்டி ஸ்தம்பம் 

60. வாக்கு ஸ்தம்பம் 

61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்) 

62. கன்னத்தம்பம் 

63. கட்கத்தம்பம் 

64. அவத்தைப் பிரயோகம்
******************************

40 விநாயகா forty


40 விநாயகா 

40 கோத்திர விநாயகா 


40ஸம்ஸ்காரங்களாவன:
1.கர்பாதானம், 2.பும்ஸவனம், 3.ஸீமந்த்ம், 4.ஜாதகர்ம, 5.நாமகரணம், 6.அன்னப்ராசனம், 7.சௌளம், 8.உபநயனம், 9.ப்ராஜாபத்ய, சௌம்ய, ஆக்நேய, வைச்வதேவ என்று நான்கு வேத வ்ரதங்கள், 13.ஸமாவர்தனம், 14.விவாஹம், தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத ப்ரும்ம யஜ்ஞம் என்று பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

அஷ்டகா-அந்வஷ்டகா, பார்வணம், ஸ்தாலீபாகம், ஆக்ரஹாயணீ, ச்ராவணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என்று ஏழு பாக யஜ்ஞங்கள், அக்நி ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ச,பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஸெளத்ராமணி என்று ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்று 7 ஸோம ஸம்ஸ்தைகள் ஆக 40 ஸம்ஸ்காரங்கள் இதில் பாதி ஸ்மார்த்த கர்மா, பாதி யஜ்ஞங்களான ச்ரௌத கர்மா, இப்படி 40 ஸம்ஸ்காரங்களாலே ப்ராஹ்மணன் ஜ்வலிக்கிறான். எப்படி பாத்திரம் தேய்க்க தேய்க்க ஜ்வலிக்கிறதோ அதுமாதிரி இந்த ஸம்ஸ்காரங்கள் கர்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் இதெல்லாம் கர்பத்லேயே அவனுக்கு ப்ராஹ்மணத்துவத்த ஏற்படுத்தக்கூடிய ஸம்ஸ்காரங்கள். இதெல்லாம் செஞ்சா என்ன செய்யாத போனா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு ஸம்ஸ்காரத்த ஒருத்தன் செய்யலேன்னா அடுத்த ஸம்ஸ்காரத்துக்கு அவனுக்கு தகுதி கிடையாது.

28 விநாயகா இருபத்தெட்டு twenty eight


28 விநாயகா 

28 கொடிய நரகங்கள்.

ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை
1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.
3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.
4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.
5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.
6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.
7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.
8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.
9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.
10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.
11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.
12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.
13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.
15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.
16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.
17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.
18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.
19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.
20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.
21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.
22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.
23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.***
24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.
25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.
26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.
27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.
28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.
இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.
இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கபடும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான். அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்க்குக் கொண்டு செல்வார்கள் என்று திருமால் கூறியருளினார்.

9 ஒன்பது விநாயகா NINE

ஒன்பது விநாயகா 

1.ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்

இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை
ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

2. 9 விநாயகா 

நவராத்திரி கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்


நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

7 ஏழு விநாயகா

7 ஏழு விநாயகா
- அன்புடன் R.P.ஓம் 8056156496

எழுகோடி மந்திரங்கள்:

1.மந்திரங்கள்:
நமஹா  விநாயகா 
சுவாஹா விநாயகா 
சுவதா விநாயகா 
பட்  விநாயகா 
உம்பட் விநாயகா 
வௌஷட் விநாயகா 
வஷட்  விநாயகா
இந்த அடிப்படையில் பார்த்தால், திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் தோத்திரத்தின்பாற்படும். ஆனால் இதில் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம் உள்ளன. இது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது.
"மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னும் அவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து" என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று. எழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.
அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும்.

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.

சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.

சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.

பட் - விக்கினங்களைத் துரத்துவது.

உம்பட் - காமாதிகளைப் போக்குவது.

வௌஷட் - தேவதைகளை இழுப்பது.

வஷட் - தேவதைகளை வசம் செய்வது.
திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர் 

2.ஏழு சிரஞ்சீவிகள் 

1. அஸ்வத்தாமர்
2. வேதவியாசர் 
3. பரசுராமர்
4. விபீசணர்
5. அனுமார்
6. மகாபெலி
7. மார்கண்டேயர்