புதன், 13 மார்ச், 2013

7 ஏழு விநாயகா

7 ஏழு விநாயகா
- அன்புடன் R.P.ஓம் 8056156496

எழுகோடி மந்திரங்கள்:

1.மந்திரங்கள்:
நமஹா  விநாயகா 
சுவாஹா விநாயகா 
சுவதா விநாயகா 
பட்  விநாயகா 
உம்பட் விநாயகா 
வௌஷட் விநாயகா 
வஷட்  விநாயகா
இந்த அடிப்படையில் பார்த்தால், திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் தோத்திரத்தின்பாற்படும். ஆனால் இதில் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம் உள்ளன. இது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது.
"மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னும் அவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து" என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று. எழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.
அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும்.

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.

சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.

சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.

பட் - விக்கினங்களைத் துரத்துவது.

உம்பட் - காமாதிகளைப் போக்குவது.

வௌஷட் - தேவதைகளை இழுப்பது.

வஷட் - தேவதைகளை வசம் செய்வது.
திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர் 

2.ஏழு சிரஞ்சீவிகள் 

1. அஸ்வத்தாமர்
2. வேதவியாசர் 
3. பரசுராமர்
4. விபீசணர்
5. அனுமார்
6. மகாபெலி
7. மார்கண்டேயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக